இன்று மின்தடை

ஆர்.எஸ்.மங்கலம், முதுகுளத்தூரில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2023-09-20 18:45 GMT

ஆர்.எஸ்.மங்கலம், 

ஆர்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆர்.எஸ்.மங்கலம் டவுண், செட்டியமடை, சூரமடை, பெரியார் நகர், பெருமாள்மடை, தலைக்கான்பச்சேரி, நோக்கங்கோட்டை, சிலுகவயல், இந்திராநகர், ஆவரேந்தல், பாரனூர், கலங்காப்புலி, சனவேலி, சவரியார்பட்டினம், புல்லமடை, ஓடைக்கால், கவ்வுர், ஏ.ஆர்.மங்களம், ஆப்ராய், பெத்தனேந்தல், கற்காத்தக்குடி, புத்தனேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என திருவாடானை மின்வாரியத்துறை உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். முதுகுளத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று முதுகுளத்தூர் டவுன், கீரனூர், நல்லூர், மணலூர், ஆத்திகுளம், கே.ஆர்.பட்டினம், கீழத்தூவல், மேலத்தூவல், காக்கூர், புளியங்குடி அதை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என முதுகுளத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்