இன்று மின்நிறுத்தம்
விருத்தாசலம், மு.பரூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
விருத்தாசலம்
விருத்தாசலம் மின்வாரிய கோட்டத்தில் இன்று(வியாழக்கிழமை) சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கோணாங்குப்பம், மாத்தூர், சித்தேரிக்குப்பம், இருசாளக்குப்பம், வடக்குப்பம், வீராரெட்டிக்குப்பம், கவணை, பழையபட்டினம், கோ.புவனூர், மணவாளநல்லூர், ஹவுசிங்போர்டு, விருத்தாசலம் நகரத்திற்குட்பட்ட மணலூர், தமிழ்நகர், வானவில் டவுன்ஷிப் மற்றும் நறுமணம், கோட்டேரி, கச்சிராயநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும். இதைபோல் விருத்தாசலம் அடுத்த மு.பரூர் துணைமின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ரெட்டிக்குப்பம், தொட்டிக்குப்பம், எருமனூர், பட்டி, மு.பரூர், சின்னப்பரூர், விஜயமாநகரம், எடச்சித்தூர், காட்டுப்பரூர், எம். புதூர், வலசை, பிஞ்சனூர், சிறுவம்பார், டி.மாவிடந்தல், மு.அகரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை விருத்தாசலம் மின்வாரிய செயற்பொறியாளர் சுகன்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.