ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர், மல்லி புதூர், வலையபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆதலால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மல்லிபுதூர், மானக சேரி, மல்லி, ஈஞ்சார், நடுவம்பட்டி, வேண்டுராயபுரம், சாமிநத்தம், வளையபட்டி, குன்னூர், கிருஷ்ணன் கோவில், பிள்ளையார் நத்தம், பூவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் கோட்ட பொறியாளர் சின்னத்துரை கூறினார்.