நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

திண்டுக்கல் நகரில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

Update: 2023-08-16 16:38 GMT

திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி திண்டுக்கல் நகரில் தாடிக்கொம்பு சாலை பகுதி, கோவிந்தாபுரம், எம்.வி.எம்.நகர், அண்ணாநகர், ரவுண்டுரோடு, ஆர்த்தி தியேட்டர் சாலை, சாலை ரோடு, செட்டிநாயக்கன்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி. என்.எஸ்.நகர், குரும்பபட்டி, பொன்மாந்துறை, விராலிபட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இதேபோல் நாகல்நகர் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் முருகபவனம், கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டி, ஆர்.வி.நகர், செல்லாண்டியம்மன் கோவில் தெரு, மாரியம்மன் கோவில் சாலை, யானைதெப்பம், மேட்டுப்பட்டி, பேகம்பூர் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று திண்டுக்கல் உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்