வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று(சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2023-08-04 20:07 GMT

வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று(சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

வில்லாபுரம்

வில்லாபுரம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி வில்லாபுரம் ஹவுசிங்ரோடு, சின்னகண்மாயின் மேற்கு பகுதிகள், எப்.எப்.ரோடு,வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், மணிகண்டன் நகர், அரவிந்த் தியேட்டர், ஜெய்ஹிந்த்புரம் 1, 2-வது மெயின்வீதி, பாரதியார் ரோடு, ஜீவாநகர் 1, 2-வது தெரு, மீனாம்பிகை நகர், தென்றல் நகர், சோலையழகுபுரம் 1,2,3-வது தெரு, அருணாசலம் பள்ளி பகுதி, முருகன் தியேட்டர், எம்.கே.புரம், சுப்பிரமணியபுரம் பகுதிகள், சுந்தர்ராஜபுரம், வெங்கடாசலபுரம், மதுரை கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் பகுதி, ராஜம் ரோடு, மீனாட்சி ரோடு, நேருநகர், டி.வி.எஸ்.நகர், பொன்மாரிநகர், அழகப்பா நகர் மெயின்ரோடு, கிருஷ்ணாரோடு, எல்.எல். ரோடு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ஆனையூர்

ஆனையூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதன்படி கரிசல்குளம், பாண்டியன்நகர், ஐ.ஓ.சி.நகர், பி.எம்.டபிள்யூ. காலனி, ரெயிலார்நகர், சங்கீத்நகர், சொக்கலிங்கநகர், கூடல்நகர் 1 முதல் 7 தெருக்கள், அகில இந்திய வானொலி நிலையம் மெயின்ரோடு, செல்லையாநகர் முழுவதும், ஆனையூர் 1,2-வது தெரு, ஜெ.ஜெ.நகர், சஞ்சீவிநகர், சாந்திநகர், அஞ்சல்நகர், திருமால்நகர், பெரியார்நகர், டி.என்.எச்.பி.காலனி, சிலையனேரி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதா தெரிவித்தார்.

புதூர்

புதூர் துணை மின்நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே பாரதி உலா ரோடு, ஜவஹர் ரோடு, பெசன்ட் ரோடு, அண்ணாநகர், சொக்கிகுளம், வல்லபாய் ரோடு, புல்லபாய் தேசாய் தெரு, ரேஸ்கோர்ஸ் ரோடு, கோகலே ரோட்டின் ஒரு பகுதி, ராமமூர்த்தி ரோடு, லாஜபாதிராய் ேராடு, சப்பாணி கோவில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, எல்.டி.சி. ரோட்டின் ஒரு பகுதி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், வருங்கால வைப்புநிதி குடியிருப்பு, ஏர் குடியிருப்பு, நியூ டி.ஆர்.ஓ.காலனி, சிவசக்தி நகர், பாத்திமாநகர், புதூர் வண்டிபாதை மெயின்ரோடு, கஸ்டம்ஸ் காலனி, நியூநத்தம் ரோடு, ரிசர்வ் லைன் குடியிருப்பு, ரேஸ்கோர்ஸ் காலனியின் ஒரு பகுதி, கலெக்டர் பங்களா, ஜவகர்புரம், திருவள்ளூவர்நகர், அழகர்கோவில் ரோடு(ஐ.டி.ஐ. பஸ் நிறுத்தம் முதல் தல்லாகுளம் பெருமாள் கோவில் வரை) டீன் குவார்ட்ஸ், காமராஜர்நகர், 1,2,3,4, ஹச்சகாண்ரோடு, கமலா முதல் 2-வது தெரு, சித்ரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் மகால், பொதுப்பணித்துறை அலுவலகம், கண்மாய் மேலதெரு, தல்லாகுளம் மூக்கபிள்ளைதெரு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள், ஆத்திகுளம், குறிஞ்சிநகர், பாலமி குடியிருப்பு, கனகவேல்நகர், பழனிசாமி நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இந்த தகவலை மின்செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்