வேப்பங்குளம் பகுதியில் இன்று மின்தடை

வேப்பங்குளம் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2022-06-06 18:27 GMT

தேவகோட்டை,

தேவகோட்டை உபகோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் வேப்பங்குளம் மின்பாதையில் இன்று(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே கோட்டூர், நயினார்வயல் காரை, ஈகரை, கோட்டவயல், நாச்சங்குளம், வேலாயுதபட்டினம், வீரை வேப்பங்குளம், நாகாடி, பாவனகோட்டை, மோயன்வயல், விஜயபுரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை தேவகோட்டை உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்