திருவண்ணாமலையில் நாளை மின் நிறுத்தம்
திருவண்ணாமலையில் நாளை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் நாளை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலைய மின் பாதைகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை திருவண்ணாமலை நகரில் உள்ள ரமணா நகர், ஆர்.ஒ.ஏ.காலனி, செங்கம் ரோடு, திருமஞ்சன கோபுர தெரு, அரச மர தெரு, குமர கோவில் தெரு, கன்னிக்கோவில் தெரு, காமாட்சியம்மன் கோவில் தெரு, ஆணைக்கட்டி தெரு, திருவூடல் தெரு, அசலியம்மன் கோவில் தெரு, போத்தராஜா கோவில் தெரு, பெரிய தெரு ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என செயற்பொறியாளர் (மேற்கு) ராஜஸ்ரீ தெரிவித்துள்ளார்.