தொட்டியபட்டி பகுதியில் நாளை மின்தடை
பராமரிப்பு பணி காரணமாக தொட்டியபட்டி பகுதியில் நாளை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
ராஜபாளையம்.
ராஜபாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மில்பீடர் மற்றும் தொட்டியபட்டி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் கோதை நாச்சியார்புரம் பீடரில் உள்ள மின் பாதைகளில் பராமரிப்பு பணி நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் சத்திரப்பட்டி, ஆர்.ஆர்.நகர், வ.உ.சி. நகர், சமுசிகாபுரம், வயக்காடு, கோதைநாச்சியாபுரம், மதுரை ரோடு, கந்தாமில், ராமலிங்காமில் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை மின்செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.