தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதியில் சனிக்கிழமை மின்தடை
தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி ஊரக கோட்டம் மற்றும் திருச்செந்தூர் கோட்ட பகுதிகளில் நாளை(சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி
இதுகுறித்து தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் பத்மா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி ஊரக மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை சுப்பிரமணியபுரம், பியூலா நகர், சீனிநகர், தொழிற்பேட்டை, கைலாசபுரம், சண்முகபுரம், கணபதி நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள், வல்லநாடு கலியாவூர், உழக்குடி, காளான்கரை, அம்பேத்கார் நகர், சின்ன கலியாவூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள், சாயர்புரம் சிவத்தையாபுரம், நடுவக்குறிச்சி பகுதிகளிலும், பழையகாயல் அகரம், ரட்சண்யபுரம் பகுதிகளிலும் நாளை (சனிக்கிழமை) பழுதடைந்த மின்கம்பம் மற்றும் தொய்வான மின்பாதையை சரி செய்யும் பணிகள் நடக்கிறது. எனவே, மேற்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
திருச்செந்தூர் கோட்டம்
இதேபோன்று திருச்செந்தூர் மின் வினியோக செயற் பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பகுதிகளில் சீரான மின்வினியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகள் போன்ற பணிகள் நாளை(சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட இருக்கிறது. எனவே, அமலிநகர், தோப்பூர், வன்னியங்காடு, பள்ளத்தூர், மனக்காடு, வன்னிமாநகரம், குடியிருப்புவிளை, கீழபள்ளிபத்து, நா.முத்தையாபுரம், நாலுமூலைக்கிணறு, பிச்சிவிளை, ஒடக்கரை, காயிதே மில்லத் நகர், காட்டுமொகதூம்பள்ளி, நரசன்விளை, சேதுக்குவாய்த்தான், இராஜபதி, நெடுங்கரை, சொக்கலிங்கபுரம் காலனி, குலசை ரஸ்தா, பழைய மீன்கடை தெரு, செட்டிகுளம், நொச்சிகுளம், இளமால்குளம், அறிவான்மொழி, மில்ரோடு, மூக்குபிறீ, பிரகாசபுரம், கச்சனாவிளை, தென்திருப்பேரை, கடையனோடை, கேம்பலாபாத், திருக்களுர், பிள்ளைவிளை, வாலிவிளை, வடலிவிளை, தோப்பூர் (மெஞ்ஞானபுரம்), ஏழுவiமுக்கி, பஸ்ஸடாண்டு ரோடு, ஸ்டாலின் நகர், காலன்குடியிருப்பு, கொத்துவாபள்ளி, நடுகாலன்குடியிருப்பு, விநாயகர் காலனி, மெய்யூர், அன்பின் நகரம், கடாட்சபுரம், பிறைகுடியிருப்பு, பள்ளக்குறிச்சி, உதிரமாடன்குடியிருப்பு, இடைச்சிவிளை, பழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.