தேனி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
தேனி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது
தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் தேனி கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், புதிய பஸ் நிலையம், தொழிற்பேட்டை, சிவாஜி நகர், அரப்படித்தேவன்பட்டி, வடபுதுப்பட்டி, பாரஸ்ட்ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்தார்.