சிவகாசியில் இன்று மின்தடை
சிறப்பு பராமரிப்பு பணிகளுக்காக சிவகாசியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
சிவகாசி,
சிவகாசி கோட்டத்தில் மின்வாரியம் சார்பில் கடந்த சில நாட்களாக சிறப்பு பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அண்ணாமலையார் காலனி, அய்யப்பன் காலனி, விளாம்பட்டி ரோடு, அய்யனார்காலனி, காயம்புநகர், கிரகதாயம்மாள் நகர், பி.எஸ்.ஆர்.நகர், சசிநகர், வேலம்மாள்நகர், திருப்பதி நகர், தங்கப்பாநகர், முனீஸ்நகர், போலீஸ் காலனி, ஆசாரி காலனி, போலீஸ் ஸ்டேஷன் ரோடு, சேர்மன் சண்முகம் ரோடு, உழவர்சந்தை, வாட்டர் டேங்க், எஸ்.எச்.என்.வி. பள்ளி, ராணி அண்ணா காலனி, பெரியாண்டவர் காலனி, முண்டகன் தெரு, சின்னதம்பி நகர், ஜக்கம்மாள் கோவில் பின்புறம், மகளிர் ேபாலீஸ் நிலையம், பெரியகுளம் காலனி, அரசு மருத்துவமனை, மடத்துப்பட்டி, மண்குண்டாம்பட்டி, சிவகாமிபுரம் காலனி ஆகிய பகுதியில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய அதிகாரி பாவநாசம் கூறினார்.