சமயபுரம், உப்பிலியபுரம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

சமயபுரம், உப்பிலியபுரம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2023-07-05 19:32 GMT

ஸ்ரீரங்கம் கோட்டம் சமயபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி, சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு, வெங்கங்குடி, வ.உ.சி. நகர், பூங்கா, எழில்நகர், காருண்யா சிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேலசீதேவிமங்கலம், புறத்தாக்குடி, கரியமாணிக்கம், தெற்கு எதுமலை, பாலையூர், வலையூர், கன்னியாகுடி, ஸ்ரீபெரும்புதூர், மாருதி நகர், தாளக்குடி, கீரமங்கலம், ராஜாநகர், செல்லதமிழ் நகர், ஆனந்த நகர், அகிலாண்டபுரம், பரஞ்சோதி நகர், கூத்தூர், நொச்சியம், பளூர், பாச்சூர், திருவாசி, அழகியமணவாளம், குமரகுடி, திருவரங்கபட்டி, கோவத்தகுடி, பனமங்கலம், எடையபட்டி, அய்யம்பாளையம், தத்தமங்கலம், தழுதாளப்பட்டி, சிறுகுடி, வீரானி, சிறுபத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், ஆய்க்குடி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழக ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.

இதேபோல் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கொப்பம்பட்டி மற்றும் டி.முருங்கப்பட்டி துணை மின் நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி கொப்பம்பட்டி, முத்தையம்பாளையம், கொப்புமாபுரி, ராஜபாளையம், உப்பிலியபுரம், ஈச்சம்பட்டி, வைரிசெட்டிபாளையம், பசலிக்கோம்பை, ஏரிக்காடு, கோம்பை, தளுகை, டி.முருங்கப்பட்டி, டி.மங்கப்பட்டி, டி.மங்கப்பட்டி புதூர், டி.பாதர்பேட்டை, டி.வெள்ளாளப்பட்டி, நாகநல்லூர், வெங்கடாசலபுரம், மாராடி, புடலாத்தி ஒ.கிருஷ்ணாபுரம், பி.மேட்டூர், எஸ்.என்.புதூர், கே.எம்.புதூர், சோபனாபுரம், காஞ்சேரிமலை, ஒடுவம்பட்டிபுதூர், ஓசரப்பள்ளி, புதூர், பச்சைமலை டாப்செங்காட்டுப்பட்டி, தென்புறநாடு பூதக்கால், செம்பூர், கம்பூர், கருவங்காடு, கீழக்கரை, குண்டக்காடி, லட்சுமணபுரம், நச்சிலிப்பட்டி, நச்சிலிப்பட்டிபுதூர், பெரிய சித்தூர், பெரும்பரப்பு, புதூர், சோளமாத்தி, தண்ணீர்பள்ளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை துறையூர் கோட்ட மின்செயற் பொறியாளர் ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்