சமயநல்லூர் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
பராமரிப்பு பணிக்காக சமயநல்லூர் பகுதியில் சமயநல்லூர் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படுகிறது.
வாடிப்பட்டி,
சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே சமயநல்லூர், தேனூர், கட்டபுளிநகர், தேடனேரி, சத்தியமூர்த்தி நகர், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாயநல்லூர், அதலை, பரவை மெயின் ரோடு, மங்கையர்கரசி கல்லூரி பகுதிகள், பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில் பாப்பாகுடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்ன கவுண்டன்பட்டி, சிறுவாலை பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை சமயநல்லூர் மின்செயற் பொறியாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.