ரெட்டியபட்டி பகுதியில் நாளை மின்தடை
ரெட்டியபட்டி பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ரெட்டியபட்டி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஆறுமுகா மில் பீடரில் உள்ள மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. எனவே எஸ். திருவேங்கடபுரம், சட்டி கிணறு, எஸ். திருக்கோதையாபுரம், சங்கம்பட்டி, அட்டை மில் முக்கு ரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.