புதுக்கோட்டை சிப்காட் நகர், வயலோகம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

புதுக்கோட்டை சிப்காட் நகர், வயலோகம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-09-04 18:06 GMT

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இங்கிருந்து மின்வினியோகம் செய்யப்படும் சிப்காட் நகர், சிப்காட் தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ தொழிற்பேட்டை (ரெங்கம்மாள் சத்திரம்), கே.கே.நகர், மாணிக்கம்பட்டி, வாகைப்பட்டி, முத்துடையான்பட்டி, கிளியூர், மேலூர், அம்மன்பேட்டை, வாகைப்பட்டி, உடையாண்டிப்பட்டி, இரும்ளி, சித்தன்னவாசல், வடசேரிப்பட்டி, வாகவாசல், முள்ளூர், இச்சடி, வடவாளம், புத்தாம்பூர், சேம்பாட்டூர், கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர், அபிராமி நகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், ராம் நகர், மச்சுவாடி, ஜீவா நகர் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் இயக்கலும், காத்தலும் கிராமியம் கண்ணன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் அண்ணா பண்ணை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இங்கிருந்து மின்வினியோகம் பெறும் வயலோகம், மாங்குடி, மண்வேளாம்பட்டி, அண்ணா பண்ணை, குடுமியான்மலை, பரம்பூர், புல்வயல், ஆரியூர், அகரப்பட்டி, பின்னங்குடி, விசலூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என இலுப்பூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அக்கினிமுத்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்