பண்ணவாடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
பண்ணவாடி பகுதியில் நாளை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
கொளத்தூர், சத்தியா நகர் ஆகிய துணைமின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பெரியதண்டா, நீதிபுரம், காவேரிபுரம், கருங்கள்ளூர், சத்தியாநகர், கத்திரிப்பட்டி, கோட்டையூர், தானமூர்த்திகாடு, உக்கம்பருத்திகாடு, சின்னதண்டா, கோவிந்தபாடி, பாலமலை, ஆலமரத்துப்பட்டி, சுப்பிரமணியபுரம், பண்ணவாடி, குரம்பனூர், சேத்துக்குழி, சவுரியார்பாளையம், வெள்ளகரட்டூர், மாமரத்தூர், ஒட்டங்காடு, காரைகாடு, ஏமனூர், கொங்கிரிப்பட்டி, கோரப்பள்ளம், குள்ளம்பாளையம், லக்கம்பட்டி, சின்னமேட்டூர் ஒரு பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை மேட்டூர் அணை செயற்பொறியாளர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.