நயினார்கோவில் பகுதியில் நாளை மின்தடை

நயினார்கோவில், அபிராமம் பகுதியில் நாளை மின்சாரம் வினியோகம் நிறுத்தப்படுகிறது,

Update: 2022-06-07 18:43 GMT

நயினார்கோவில்,

பரமக்குடி துணை மின் நிலையத்தில் இருந்து சத்திரக்குடி மின்பாதையில் நாளை(வியாழக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே சத்திரக்குடி பிரிவிற்கு உட்பட்ட சத்திரக்குடி, காமன்கோட்டை, முத்துவயல், எஸ்.கொடிக்குளம், கவிதைகுடி, அரியகுடி மற்றும் நயினார்கோவில் பிரிவிற்கு உட்பட்ட நயினார்கோவில், வல்லம், சிறகிக்கோட்டை, தாளையடிகோட்டை, பகைவென்றி, அக்கிரமேசி, பாண்டியூர், எஸ்.வி. மங்களம், உதயகுடி, நகரம், அரியாங்கோட்டை, வாதவனேரி ஆகிய இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இந்த தகவலை உதவி மின்பொறியாளர் புண்ணியராகவன் தெரிவித்தார்.

அபிராமம் துணை மின்நிலையத்தில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே அபிராமம், நத்தம், வேப்பங்குறிச்சி, முத்தாதிபுரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இந்த தகவலை கமுதி மின்வாரிய செயற்பொறியாளர் விஜயன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்