முதுகுளத்தூர் பகுதிகளில் இன்று மின்தடை

முதுகுளத்தூர் பகுதிகளில் இன்று மின்தடை

Update: 2023-01-04 18:45 GMT

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று(வியாழக்கிழமை) முதுகுளத்தூர் டவுன், கீழ சாக்குளம், மேலசாக்குளம், காஞ்சிரங்குளம், எட்டிசேரி, சித்திரங்குடி, எஸ்.பி.கோட்டை, கொண்டுலாவி, கிடாதிருக்கை, பருக்கை குடி, விளங்குளத்தூர், வெண்ணீர் வாய்க்கால், கீழத்தூவல், மேலத்தூவல், கே.ஆர். பட்டினம், பொலிகால், அப்பனேந்தல், ஏ.நெடுங்குளம். காக்கூர், சமத்துவபுரம், புளியங்குடி, ஆதனகுறிச்சி, கீழப்பனையடியேந்தல் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை முதுகுளத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்தார்.

மேலும் திருவாடானை நகரிகாத்தான் துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகிற 7-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை திருவாடானை, நகரிகாத்தான் ஆண்டாவூரணி, மங்கலக்குடி, சி.கே.மங்கலம், வெள்ளையபுரம், ஓரியூர், அஞ்சுகோட்டை, பாண்டுகுடி, புளியால், கருமொழி, ஓரிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும் என்று உதவி செயற்பொறியாளர் நிசக் ராஜா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்