மின்னாம்பள்ளி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
மின்னாம்பள்ளி பகுதியில் நாளை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
சேலம் மின்னாம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்னாம்பள்ளி, செல்லியம்பாளையம், மேட்டுப்பட்டி தாதனூர், குள்ளம்பட்டி, வலசையூர், பள்ளக்காடு, தாதனூர், வெள்ளியம்பட்டி, பருத்திகாடு, பாலப்பட்டி, கூட்டாத்துப்பட்டி, விளாம்பட்டி, பூசாரிப்பட்டி, அனுப்பூர், கோலாத்துக்கோம்பை, நீர்முள்ளிக்குட்டை, ஏரிபுதூர், ஏ.என்.மங்கலம், எஸ்.என்.மங்கலம், ஜலகண்டாபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை சேலம் கிழக்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.