கீரனூர் பகுதியில் நாளை மின்தடை
கீரனூர் பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
கீரனூர்:
குளத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும், கீரனூர் பேரூராட்சி பகுதிகளான பரந்தாமன் நகர், கீழக்காந்திநகர் மேல காந்தி நகர், நான்கு ரத வீதிகள், எழில் நகர், என்.சி.ஓ. காலனி, முஸ்லிம் தெரு, பஸ் ஸ்டாண்ட், ஜெய்ஹிந்த் நகர், ஹவுசிங் யூனிட், பசுமை நகர், அழகு நகர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.