கிச்சிப்பாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
கிச்சிப்பாளையம் பகுதியில் நாளை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
கிச்சிப்பாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாதுபாய் குட்டை, கடைவீதி, பழைய பஸ் நிலையம், கோட்டை, கலெக்டர் அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, செவ்வாய்பேட்டை, முதல் அக்ரஹாரம், மேட்டுத்தெரு, செரிரோடு, பிரட்ஸ் ரோடு, மரக்கடை வீதி, கருங்கல்பட்டி, களரம்பட்டி, பில்லுக்கடை, குகை, எருமாபாளையம், சீலநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி, கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு, நாராயணநகர், பொன்னம்மாபேட்டை, பட்டைக்கோவில், டவுன் ரெயில் நிலையம், 4 ரோடு ஒரு பகுதி, லைன்மேடு, வள்ளுவர்நகர், அன்னதானப்பட்டி, சங்ககிரி ரோடு ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நடைபெறாது. இந்த தகவலை சேலம் நகர மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரி தெரிவித்துள்ளார்.