கண்டதேவி பகுதியில் இன்று மின்தடை
கண்டதேவி பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது
தேவகோட்ட
தேவகோட்டை உபகோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் கண்ணங்குடி மின்பாதையில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிக்காக மின் தடை செய்யப்படுகிறது. இதனால் கண்ணங்குடி மின்பாதையில் அகதிகள் முகாம், கண்டதேவி, தாழையூர்ரோடு, நடராஜபுரம், இறகுசேரி, சித்தானூர், நானக்குடி, அனுமந்தகுடி, தத்தனி, மீனாப்பூர், பஞ்சமாரி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.