கமுதி,
கமுதி துணை மின்நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அபிராமம், முதுகுளத்தூர், பார்த்திபனூர், கமுதி நகர், செங்கப்படை, பேரையூர், மண்டலமாணிக்கம், கீழராமநதி, பசும்பொன் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுவதாக கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயன் தெரிவித்துள்ளார்.