அரவக்குறிச்சி பகுதியில் நாளை மின்நிறுத்தம்
அரவக்குறிச்சி பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி, கருங்கல்பட்டி, செல்லிவலசு, அரவக்குறிச்சி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, டவுன், அண்ணா நகர் ,மண்வாரி, வேலம்பாடி, பெரிய சீத்தப்பட்டி, ஈசநத்தம், ஆலமரத்துப்பட்டி, முத்துக்கவுண்டனூர், சந்தைப்பேட்டை, வெடிக்காரன் பட்டி, தலையாரிப்பட்டி, பாறையூர், புதுப்பட்டி, கரடிப்பட்டி, பெரிய வலையப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.