அம்மாப்பேட்டை பகுதியில் நாளை மின்தடை
அம்மாப்பேட்டை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது
திருச்சி, ஜூன்.7-
திருச்சி அம்மாப்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ராம்ஜி நகர், கள்ளிக்குடி, புங்கனூர், அரியாவூர், சத்திரப்பட்டி, அம்மாப்போட்டை, இனாம்குளத்தூர், வெள்ளிவாடி, நவலூர் குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி சித்தாநத்தம், ஆலம்பட்டிபுதூர், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை மன்னார்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் கா.முத்துராமன் தெரிவித்துள்ளார்.