அரசரடி, ஹார்விபட்டி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்

அரசரடி, ஹார்விபட்டி பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது

Update: 2022-07-02 18:46 GMT

மதுரை

அரசரடி, ஹார்விபட்டி பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

அரசரடி

மதுரை அரசரடி துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைெபறுவதால் நாளை(திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் அரசரடி மின்நிலையத்திற்கு உட்பட்ட சம்மட்டிபுரம் மெயின்ேராடு, ஸ்ரீராம் நகர், எம்.எம்.நகர், எச்.எம்.எஸ்.காலனி, டோக்நகர் 7-வது தெரு முதல் 15-வது தெரு வரை, கோஆப் டேக்ஸ் காலனி, ஜெய்நகர், ராஜராஜேஸ்வரி நகர், இருளாண்டி தேவர் காலனி, கிருதுமால் நகர், ஜானகி நகர், ஆனந்தா நகர், தேவகி ஸ்கேன், வெள்ளைகண்னு தியேட்டர் ரோடு, பிக்பஜார், பொன்மேனிபுதூர், அமிர்தா நகர், தேனி மெயின்ரோடு ஈத்கா பில்டிங் வரை, பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகின்றது.

பசுமலை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான மாடக்குளம் மெயின்ரோடு, கந்தன்சேர்வை நகர் முழுவதும், தேவிநகர், கிருஷ்ணநகர், சபரி நகர், நமச்சிவாய நகர், ஜஸ்வர்யாநகர், செரூப், பெரியார் நகர், மல்லிகை கார்டன், அய்யனார் கோவில், சத்திய மூர்த்தி நகர், காயத்திரி தெரு, துரைச்சாமி நகர், சவுபாக்கியநகர், துர்காநகர், லைன்சிட்டி, எஸ்.ஆர்.வி. நகர், அமைதிசோலை, சுந்தர் நகர், ஜெ.ஜெ. நகர், ஹார்விப்பட்டி பகுதி ஆகிய இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகின்றது. இந்த தகவலை மின்செயற்பொறியாளர் பழனி தெரிவித்தார்.

மேல அனுப்பானடி

அதேபோல தெப்பம் மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான புது மீனாட்சி நகர், கேட்லாக் ரோடு, மேல அனுப்பானடி, சின்ன கண்மாய், ஜோசப் பார்க், சி.எம்.ஆர். ரோடு ஒரு பகுதி மற்றும் சண்முகா நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகின்றது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்