12-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்
கோவிலூர் பகுதியில் 12-ந் தேதி மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
காரைக்குடி,
கோவிலூர் துணை மின் நிலையத்தில் வருகிற 12-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மானகிரி, தளக்காவூர், கீரணிப்பட்டி, கூத்தலூர், ஆலங்குடி, இலங்குடி, தட்டட்டி, கொரட்டி, நாச்சியாபுரம், கம்பனூர், வலைய பட்டி, கொங்கராதி, கண்டர மாணிக்கம், கீழப்பட்டங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதா தேவி தெரிவித்துள்ளார்.