இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தம்

நாமக்கல், கபிலர்மலை, எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் பராமரிப்பு காரணமாக இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2023-09-19 18:45 GMT

இன்று மின்சாரம் நிறுத்தம்

நாமக்கல் துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்.ஜி.ஓ.காலனி, வீசாணம், சின்ன முதலைப்பட்டி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

நாளை

எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, கபிலர்மலை ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டான்செட்டி, வரதராஜபுரம், சிங்களம்கோம்பை, காவக்காரப்பட்டி, பவித்திரம்புதூர், செல்லிபாளையம், கஸ்தூரிப்பட்டி.

காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம். கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூர், செல்லப்பம்பாளையம், பெரியமருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணாநகர், கொளக்காட்டுப்புதூர், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலர்பாளையம், காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இந்த தகவல்களை மின்வாரிய செயற்பொறியாளர்கள் சுந்தரராஜன், வரதராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்