விசைத்தறி தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்

ராஜபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-06 19:06 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விசைத்தறிகள்

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் பருத்தி சேலை உற்பத்தி செய்யும் 600 விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இந்த தறிகளை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இப்பகுதி தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு குறித்து ஒப்பந்தம் போடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கூலி உயர்வு சம்பந்தமாக தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெறாததால் பத்திரகாளியம்மன் விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கைகள் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்

எனவே விசைத்தறி உரிமையாளர்களை கண்டித்தும், தொழிலாளர் துறை அதிகாரிகளை கண்டித்தும், ஏ.ஐ.டி.யு.சி. மற்றும் சி.ஐ.டி.யு, தொழிற் சங்கம் சார்பில் கால வரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று தொழிற்சங்க நிர்வாகிகள் தளவாய்புரத்தில் அமைந்துள்ள செட்டியார்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தங்களது கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் சாலை மறியலில் ஈடுபடுவோம் என நிர்வாகிகள் அறிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்