வயல் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

மயிலாடுதுறை அருகே வயல் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-08 18:45 GMT


மயிலாடுதுறை அருகே வயல் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

மயிலாடுதுறை அருகே வழுவூர்-நெய்குப்பை கிராமத்தில் விவசாயம் செய்து வரும் நிலத்தின் வழியாக செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்ந்து உள்ளது.

மயிலாடுதுறை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட இந்த பகுதி விவசாயிகள் இதுகுறித்து பலமுறை மின்வாரியத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சீரமைக்க கோரிக்கை

விவசாய நிலத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால், மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே விவசாயிகளின் நலன் கருதி மின்சாரத்துறை அதிகாரிகள் உடனடியாக மேற்கண்ட பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பியை சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்