தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

Update: 2023-07-28 19:21 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை ஒன்றியம் பாளையம்பட்டி ஊராட்சி கொத்தனார் காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உயர் அழுத்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்