திருச்சி, தா.பேட்டை, உப்பிலியபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

திருச்சி, தா.பேட்டை, உப்பிலியபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-06-16 19:44 GMT

திருச்சி:

மின் நிறுத்தம்

தா.பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான தா.பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சபெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அழகாபுரி, ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவானூர்புதூர், மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜபாளையம், லட்சுமணபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்கலம், ஜெம்புநாதபுரம், திருத்தலையூர், ஆர்.கோம்பை, இ.பாதர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 3 மணி வரை மின் தடை ஏற்படும்.

இதேபோல் மன்னார்புரம் துணை மின்நிலையத்தில் நாளை அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ப்பட உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான மன்னார்புரம் டி.வி.எஸ். டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே.காலனி, சி.எச்.காலனி, உஸ்மான்அலிதெரு, சேதுராமன்பிள்ளை காலனி, ராமகிருஷ்ணா நகர், முடுக்குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ்கோர்ஸ் ரோடு, கேசவ நகர், காஜா நகர், ஜே.கே.நகர், ஆா்.வி.எஸ்.நகர், சுப்ரமணியபுரம், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, ரஞ்சிதபுரம், செங்குளம் காலனி, இ.பி.காலனி, காஜாமலை, தர்கா ரோடு, மன்னார்புரம் (கலெக்டர் பங்களா), அன்புநகர், அருணாச்சல நகர், காந்தி நகர், டி.எஸ்.பி. முகாம், பாரதி மின்நகர், ஸ்டேட் பேங்க் காலனி, சிம்கோ காலனி, கிராப்பட்டி காலனி, கிராப்பட்டி, காஜாமலை காலனி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

உப்பிலியபுரம் பகுதியில்...

மேலும் உப்பிலியபுரம் பகுதியில் உள்ள தங்கநகர் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டியில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான எஸ்.என்.புதூர், இ.பாதர்பேட்டை, ஆர்.கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, ஆங்கியம், சாலக்காடு, கவுண்டம்பாளையம், கீழப்பட்டி, வடக்குப்பட்டி, கோட்டபாளையம், வி.ஏ.சமுத்திரம், பி.மேட்டூர், கே.என்.புதூர், மாராடி, புளியஞ்சோலை, விஸ்வாம்பாள்சமுத்திரம்(தெற்கு, வடக்கு), வலையப்பட்டி, ரெட்டியாப்பட்டி, பச்சபெருமாள்பட்டி, ஆலத்துடையான்பட்டி, சிறுநாவலூர், நெட்டவேலம்பட்டி, சீத்தக்காடு, கருப்பம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்றும், கொப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் உள்ள வைரிசெட்டிபாளையம் உயரழுத்த மின் பாதையில் மழைக்கால முன்னெச்சரிக்கை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வைரிசெட்டிபாளையம் மற்றும் கொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் ஆர்.அசோக்குமார் (முசிறி), கே.ஏ.முத்துராமன் (திருச்சி கிழக்கு), ஆனந்தகுமார்(துறையூர்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்