சென்னை தரமணியில் 10மணி நேரம் மின் தடை: மக்கள் அவதி
சென்னை தரமணியில் மின்சார பெட்டி, பட்டாசு போல வெடித்து சிதறியால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
சென்னை தரமணியில் உள்ள ராஜாஜி தெருவில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த மின்சார பெட்டி, பெரும் வெடி சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். மின்பெட்டி வெடித்தன் காரணமாக அப்பகுதியில் சுமார் 10 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இந்த மின் தடையால், அப்பகுதியில் வசிக்கும்பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.