தொண்டி,
தொண்டி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை(புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொண்டி, எஸ்.பி.பட்டினம், நம்புதாளை, பாசிப்பட்டினம், முள்ளிமுனை, காரங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும் என உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.