திருப்புவனத்தில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை

திருப்புவனத்தில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது

Update: 2023-06-04 18:45 GMT

திருப்புவனம்

திருப்புவனம் பகுதியில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் பகலில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இரவு நேரங்களில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் என அனைவரும் இரவில் தூங்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

நள்ளிரவு முதல் அதிகாலை வரை பலமுறை மின்தடை ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அடிக்கடி மின்தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து இரவு நேரங்களில் சீரான மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்