திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2023-01-16 19:02 GMT

திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி திண்டுக்கல் புறநகர் பகுதிகளான பொன்னகரம், நல்லாம்பட்டி, வாழைக்காய்பட்டி, நரசிங்கபுரம், நாகல்புதூர், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, பாரதிபுரம், என்.ஜி.ஓ. காலனி, அடியனூத்து, காப்பிளியப்பட்டி, ரெயில்நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திண்டுக்கல் தெற்கு மின் பகிர்மான வட்ட உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்தார்.

இதேபோல் சின்னாளப்பட்டி கீழக்கோட்டை துணை மின்நிலையத்திலும் நாளை மறுநாள் பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி காந்திகிராமம், சின்னாளப்பட்டி, பூத்தாம்பட்டி, ஜாதிகவுண்டன்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, செட்டியப்பட்டி, கோட்டைப்பட்டி, அம்பாத்துரை, திருநகர், சிறுமலை உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்