ஆனந்தூர் பகுதியில் மின்தடை
ஆனந்தூர் துணை மின் நிலையத்தில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூர் துணை மின் நிலையத்தில் இன்று(சனிக்கிழமை) மாதந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே. இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கூடலூர், காவனக்கோட்டை, கொக்கூரணி, கோவிந்தமங்களம், சூரியான்கோட்டை, பனிக்கோட்டை, நத்தக்கோட்டை, புதுகுறிச்சி, புத்தூர், ஓடக்கரை, தூவார், ஆயங்குடி, சிறுநாகுடி, பூவாணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை திருவாடானை மின் வாரியத்துறைஉதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) நிஷாக் ராஜா தெரிவித்துள்ளார்.