விழுப்புரம், கண்டாச்சிபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

விழுப்புரம், கண்டாச்சிபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-12-06 18:45 GMT


விழுப்புரம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட வி.அகரம், தொழிலக மின்னூட்டிகளில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காகுப்பம், கிழக்கு சண்முகபுரம் காலனி, திருநகர், லட்சுமி நகர், மகாராஜபுரம், ராகவன்பேட்டை, ஆசிரியர் நகர், பொய்யப்பாக்கம், மாதிரிமங்கலம், ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு, எருமனந்தாங்கல், தொடர்ந்தனூர், கிழக்கு புதுச்சேரி சாலை, இ.பி.காலனி, கீழ்பெரும்பாக்கம், எம்.டி.ஜி. நகர், சகுந்தலா நகர், ரங்கநாதன் நகர் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது. இதேபோல் கண்டாச்சிபுரம் தாலுகா காரணைபெரிச்சானூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காரணைபெரிச்சானூர், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டனூர், மேல்வாலை, ஒதியத்தூர், சி.மெய்யூர், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், சு. பில்ராம்பட்டு, பரனூர், வி.சித்தாமூர், காடகனூர் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சைமன் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்