இன்று மின்சாரம் நிறுத்தம்
ராமேசுவரம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணி நடைபெறுவதை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ராமேசுவரம் நகர் அனைத்து பகுதி, வேர்க்கோடு, பர்வதம், புதுரோடு, நடராஜபுரம், பஸ் நிலையம், தங்கச்சி மடம், அக்காள்மடம், பாம்பன், மண்டபம், மண்டபம் கேம்ப், மறைக்காயர் பட்டணம் உள்பட அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படும். பொதுமக்களுக்கு இந்த தகவலை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.