லட்சுமணம்பட்டி, பாப்பம்பட்டி பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

லட்சுமணம்பட்டி, பாப்பம்பட்டி பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2022-08-20 14:31 GMT

திண்டுக்கல்லை அடுத்த லட்சுமணம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் லட்சுமணம்பட்டி, சுக்காம்பட்டி, காளனம்பட்டி, பஞ்சம்பட்டி, காக்காத்தோப்பு, சேடப்பட்டி, பெருமாள்கவுண்டன்பட்டி ஆகிய ஊர்களுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திண்டுக்கல் வடக்கு உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி, தாழையூத்து துணை மின்நிலையங்களில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி பாப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, காவலப்பட்டி, வேலாயுதம்பாளையம்புதூர், தாதநாயக்கன்பட்டி, கரடிக்கூட்டம், தாழையூத்து, மொட்டனூத்து, வயலூர், சாமிநாதபுரம், கண்டியகவுண்டன்புதூர், புஷ்பத்தூர், லட்சலப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை பழனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்