திருப்பாச்சேத்தி, இடையமேலூரில் மின்தடை

திருப்பாச்சேத்தி, இடையமேலூரில் மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2022-06-14 17:49 GMT

சிவகங்கை, 

திருப்பாச்சேத்தி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால்  காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருப்புவனம் புதூர், பழையூர், செல்லப்பனேந்தல், லாடனேந்தல், அல்லிநகரம், கீழ ராங்கியம், மேலராங்கியம், வயல் சேரி, கலியாந்தூர், மேல வெள்ளூர், கீழ வெள்ளூர், மாங்குடி, அம்பலத்தாடி, மணலூர், அகரம், ஒத்தவீடு, மடப்புரம், பூவந்தி, வடகரை, பொட்டபாளையம், புலியூர், கொந்தகை, கீழடி, சொட்டதட்டி, சைனாபுரம், கரிசல்குளம், காஞ்சரங்குளம், முக்குடி செங்குளம், திருப்பாச்சேத்தி, பழையனூர், மாரநாடு, ஆவரங்காடு, மேலச்சொரிக்குளம், வெள்ளிக்குறிச்சி, முதுவன் திடல் மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களில் மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார். இதேபோல இடையமேலூர் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சாலூர், இடையமேலூர், மலம்பட்டி, கூட்டுறவுபட்டி, ஒக்கப்பட்டி, வில்லிபட்டி, மேலப்பூங்குடி, பாப்பாகுடி, கண்டாங்கிபட்டி, குமாரபட்டி தமராக்கி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்