9-ந்தேதி மின்தடை
விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி பகுதிகளில் 9-ந்தேதி மின்தடை
நெல்லை:
கல்லிடைகுறிச்சி மின் கோட்டத்துக்கு உட்பட்ட விக்கிரமசிங்கபுரம் மற்றும் ஆழ்வார்குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற 9-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. எனவே அங்கு இருந்து மின்வினியோகம் பெறும் காரையாறு, சேர்வலார், பாபநாசம், வி.கே.புரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகபட்டி, முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், ஏ.பி.நாடானூர், துப்பாக்குடி, கலிதீர்த்தான்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பான்குளம் பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை கல்லிடைகுறிச்சி மின்வினியோக செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் தெரிவித்து உள்ளார்.