மின்கம்பி திருட்டு

உளுந்தூர்பேட்டை அருகே மின்கம்பி திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-09-19 18:45 GMT

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி இந்துமதி (வயது 51). இவரது வயலில் உள்ள மின்மோட்டாருக்கு செல்லும் மின்கம்பி மற்றும் குழாயை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்து இந்துமதி அளித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்