மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

Update: 2022-09-26 19:42 GMT

தஞ்சை மணிமண்டம் அருகே உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் மின்வரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், பொறியாளர்கள் அடங்கிய தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு பொறியாளர் சங்கத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ ராஜாராமன், தொழிலாளர் சம்மேளனம் முபாரக் பாட்ஷா, பொறியாளர் கழகம் மகாலிங்கம், அண்ணா தொழிற்சங்கம் முருகேசன், பொறியாளர் சங்கம் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் துணை மின் நிலையங்கள் மற்றும் சில பணிகளை ஒப்பந்த முறையில் விடுவதையும் மற்றும் ரீடிப்ளாய்மெண்ட் செய்வதையும் திரும்ப பெற வேண்டும். வாரிய ஆணைய எண் 2 ஐ ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டத்தில் பல்வேறு சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்