பவுர்ணமி கிரிவலம் நாளை மாலை தொடங்குகிறது

திருவண்ணாமலையில் நாளை (வெள்ளிக்கிழமை) பவுர்ணமி கிரிவலம் தொடங்குகிறது.

Update: 2022-09-08 14:12 GMT

திருவண்ணாமலையில் நாளை (வெள்ளிக்கிழமை) பவுர்ணமி கிரிவலம் தொடங்குகிறது.

கிரிவலம்

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றியுள்ள சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6.23 மணிக்கு தொடங்குகிறது. இது நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 4.35 மணியளவில் நிறைவடைகிறது.

பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் செய்யப்பட்டு வருகிறது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மேலும் இன்று நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தொடர்ந்து இன்று மாலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் ராஜகோபுரம் அருகில் உள்ள பெரிய நந்திக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

திரளான பக்தர்கள்

பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்