கோழிப்பண்ணையில் திடீர் தீ விபத்து

அரூர் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 ஆயிரம் கோழிகள் தீயில் கருகி செத்தன.

Update: 2022-09-04 17:08 GMT

அரூர் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 ஆயிரம் கோழிகள் தீயில் கருகி செத்தன.

கோழிப்பண்ணையில் தீ

அரூர் அருகே உள்ள தாமரைகோழியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இந்த கோழிப்பண்ணையில் திடீரென தீப்பிடித்து மளமளவன எரிந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விஸ்வநாதன் அரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் பண்ணையில் இருந்த 2 ஆயிரம் கோழி குஞ்சுகள் தீயில் கருகி செத்தன.

போலீசார் விசாரணை

மேலும் பண்ணையில் இருந்த 10 மூட்டை தீவனம், தீவன பாக்ஸ், படுதா, மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது. சேத மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தீயணைப்பு துறையினர் நடத்திய விசாரணையில் மின் கசிவால் இந்த தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்