தொட்டியம் பேரூராட்சியில் துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

தொட்டியம் பேரூராட்சியில் துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2022-05-25 21:28 GMT

திருச்சி மாவட்டம் தொட்டியம் பேரூராட்சியில் துணைத்தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலராக திருச்சி மண்டல டாஸ்மாக் பறக்கும் படை சார் ஆட்சியர் காளிமுத்தன் கலந்து கொண்டு தேர்தலை நடத்தினார். பேரூராட்சி தலைவர் சரண்யாபிரபு, செயல் அலுவலர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொத்தமுள்ள 15 கவுன்சிலர்களில் 10-வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கவுன்சிலர் கலைச்செல்வி மற்றும் 11-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் அய்யப்பனை தவிர மற்றவர்கள் யாரும் வராததால் துணைத்தலைவர் தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி துணைத்தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்