கனமழை காரணமாக ஓ.பன்னீர்செல்வத்தின் புரட்சிப் பயண தொடக்கவிழா ஒத்திவைப்பு

காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் புரட்சிப் பயணத்தின் தொடக்கவிழா கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-03 13:58 GMT

காஞ்சிபுரம்,

அ.தி.மு.க.வில் தலைமை பதவி யாருக்கு என்கிற போட்டியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து தனி அணியாக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம் அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவர் விரைவில் அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அ.தி.மு.க.வை மீட்டெடுப்பதற்காக இன்று முதல் புரட்சிப் பயணத்தை தொடங்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். காஞ்சிபுரத்தில் இன்று மாலை தொடங்க இருந்த இந்த பிரச்சார பயணத்துக்காக, கனியனூர் அருகே பிரமாண்ட தொடக்கவிழா பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேச இருந்தார்.

இந்த நிலையில் தற்போது அந்த பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புரட்சிப் பயணத்தின் தொடக்கவிழா பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் இதே இடத்தில் வேறொரு நாளில் பிரம்மாண்டமாக பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்