உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு

சங்கராபுரத்தில் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு

Update: 2022-12-20 18:45 GMT

சங்கராபுரம்

சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் சங்கராபுரம் பூட்டை சாலையில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளையும் அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு நாம்தமிழர் கட்சியினருக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர்.

அதன் பேரில் நேற்று சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சரவணன் தலைமையில், டாஸ்மாக் உதவி மேலாளர் ஆனந்தன், தனி தாசில்தார் (கலால்) அருங்குளவன், சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி, வருவாய் ஆய்வாளர் கல்யாணி ஆகியோர் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.

கூட்டத்தில் பூட்டை சாலையில் அடிக்கடி விபத்து நடக்கும் இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை 30 நாட்களுக்குள்ளாகவும், மீதமுள்ள 2 மதுக்கடைகளை 90 நாட்களுக்குள்ளும் அகற்றி ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை ஏற்று நாம்தமிழர் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். இதில் கிராம நிர்வாக அலுவலர் ராஜா, நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் அரசு அதிகாாிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்