ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
அருப்புக்கோட்டை,
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை தான் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை அ.தி.மு.க.வில் எழுந்துள்ளது. இதனிடையே அ.தி.மு.க.விற்கு தலைமையேற்க கோரி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தனித்தனியே சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அருப்புக்கோட்டையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.விற்கு அவர் தலைமை ஏற்கவேண்டும் என்ற வகையில் பழைய பஸ் நிலையம், மதுரை ரோடு, விருதுநகர் ரோடு, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். இது அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.